1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (11:49 IST)

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட்களை இழந்து 339 ரன்கள் சேர்த்தது.

முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்ப அஸ்வினும் ஜடேஜாவும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 85 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்த போட்டியில் 7 ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் சேர்ந்து 226 ரன்கள் சேர்த்தார் அஸ்வின். இந்த போட்டியில் அவர் அடித்த சதம் அவரின் 6 ஆவது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் தோனியின் சதங்களின் எண்ணிக்கையை அவர் சமன் செய்துள்ளார். தோனி 90 போட்டிகளில் விளையாடி 6 சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.