வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (09:24 IST)

இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை: வரிசையில் காத்திருக்கும் ஆப்பிள் ஆர்வலர்கள்

இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று தொடங்கியிருக்கிறது. இன்று அதிகாலை முதலே மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் ஆப்பிள் சாதனங்களை விரும்பும் மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு இந்தியாவில் தங்களின் முதல் ஆப்பிள் ஸ்டோர்களை திறந்த நிலையில் இன்று ஐபோன் 16 சீரிஸில், ஐபோன் 16, ஐபோன் 16+, ஐபோன் 16 புரோ, மற்றும் ஐபோன் 16 புரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் விற்பனை தொடங்கியது.

மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் 21 மணி நேரம் காத்திருந்து, புதிய ஐபோனை வாங்கியதாக  இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார். ’ நான் நேற்றிரவு முதல் காத்திருக்கின்றேன். இன்று காலை 8 மணிக்கு மும்பை ஆப்பிள் ஸ்டோருக்கு வந்த முதல் நபராக நுழைந்தேன். இந்த நாள் எனக்கு மிகவும் உற்சாகமாக தொடங்கியுள்ளது என்று கூறினார்.

டெல்லியை சேர்ந்த ஆப்பிள் ரசிகர் ஒருவர், ‘நான் காலை 6 மணிக்கு வந்தேன். ஐபோன் 16 புரோ மேக்ஸ் வாங்கி உள்ளேன். ஐஓஎஸ் 18 இயங்குதளமும், கேமராவின் ஸூம் அம்சமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Edited by Siva