புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (09:40 IST)

ரிஷப் பண்ட்டின் இன்ஸ்டா லைவ்வில் சர்ப்ரைஸ் கொடுத்த தோனி… வைரல் வீடியோ!

இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நிலையில் அங்கு தற்போது ஹோட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாட இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் அங்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அப்போது ரிஷப் பண்ட் மற்ற வீரர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ சாட் ஒன்றை செய்தார். அப்போது அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் இடம்பெற்றார். அப்போது பண்ட் “ஜாலியாக பொழுதைக் கழிக்கிறீர்கள்” என தோனியை சீண்ட, அவர் சிரித்துக்கொண்டே சாட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.