தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்திய தாலிபான்கள்.. எல்லை பகுதியில் போர் பதற்றம்!
- டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!
- சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
- நான் மட்டும் போரை நிறுத்தலனா பாகிஸ்தான் அதிபர் இறந்துபோயிருப்பார்!.. டிரம்ப் பேச்சு...
- ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!
டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் அரையிறுதி நம்பிக்கையை தக்கவைத்துள்ளது.
குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், நியூசிலாந்தின் தோல்வி சல்மான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு கதவுகளை திறந்துவிட்டுள்ளது.
தற்போது நியூசிலாந்து 3 புள்ளிகளுடன் தனது ஆட்டங்களை முடித்துள்ளது. ஒரு புள்ளியுடன் இருக்கும் பாகிஸ்தான், இன்று நடைபெறும் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளைப் பெறும். ஆனால், நியூசிலாந்தின் நிகர ரன் ரேட்டை விட அதிக ரன் ரேட் பெற, பாகிஸ்தான் இலங்கையை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் அல்லது 13.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும்.
ஒருவேளை மழை காரணமாக போட்டி ரத்தானால், நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தானின் தலைவிதி இப்போது இலங்கையுடனான அந்த ஒரு வெற்றியை பொறுத்தே அமைந்துள்ளது. அதேபோல் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலை உள்ளது.
Edited by Siva
