1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. T20 World Cup: India's Do-or-Die Battle Against Zimbabwe for Semis Spot

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

: T20 World Cup 2026
நடப்பு டி20 உலகக்கோப்பையின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய அணி இன்று ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. 
 
அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, இந்தியா இன்று பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்தால் 77 ரன்கள் வித்தியாசத்திலும், அல்லது 150 ரன்கள் இலக்கை 11 ஓவர்களுக்குள்ளும் எட்ட வேண்டும்.
 
அணி மாற்றமாக, ரிங்கு சிங்கிற்கு பதில் சஞ்சு சாம்சனும், வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அக்ஷர் படேலும் களமிறங்க வாய்ப்புள்ளது. இந்திய அணியின் வெற்றி மட்டுமின்றி, மற்ற அணிகளின் வெற்றி-தோல்விகளும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது.
 
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று தனது அதிரடியை காட்ட வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி