ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2022 (16:31 IST)

சி எஸ் கே வை மறைமுகமாக தாக்கும் ஜடஜாவின் சமூகவலைதளப் பதிவு!

சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா அடுத்த ஆண்டு அந்த அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது ஜடேஜா அளவுக்கு யாருமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள். சென்னை அணியை வழிநடத்தும் பெருமிதத்தோடு களமிறங்கியிருப்பார். ஆனால் அவரின் தனிப்பட்ட மோசமான ஃபார்ம் காரணமாகவும், சி எஸ் கே அணியின் தொடர் தோல்வி காரணமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆண்டு சீசனில் கடைசி சில போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகினார். இது சம்மந்தமாக சி எஸ் கே அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஜடேஜாவுக்கு பில்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காயத்தை அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் அவரின் காயத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவர் சீக்கிரம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறி இருந்தது.

ஆனால் மற்றொரு பக்கத்தில் ஜடேஜாவை சமூகவலைதளத்தில் பின் தொடர்வதை சி எஸ் கே அட்மின் பக்கம் நிறுத்தியது. ஏற்கனவே இதுபோலதான் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய போதும் அவரை முதலில் அன் பாலோ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சி எஸ் கே அணி தொடர்பான தனது பதிவுகள் சிலவற்றை நீக்கினார்.

இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “யாருக்காகவும் உங்கள் தரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். சுயமரியாதை மிகவும் முக்கியம்” எனக் குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவரின் இந்த பதிவு மறைமுகமாக சி எஸ் கே அணியைத் தாக்குவது போல அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.