தொடர்புடைய செய்திகள்
- 99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!
- கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?
- 2026 டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்ற 11வது அணி.. இன்னும் 3 அணிகள் எவை எவை?
- பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
- அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்
SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இரு அணிகளுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை அதிகளவில் அடித்து வருகின்றனர்.
நேற்று இங்கிலாந்து அணி பேட் செய்த நிலையில் இந்திய அணி வீரர் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இத்தனைக்கும் அவர் பந்துவீச்சில் நான்கு கேட்ச்கள் வெவ்வேறு ஃபீல்டர்களால் கோட்டைவிடப்பட்டது. தனது அபாரமான பந்துவீச்சால் 5 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் SENA என சொல்லப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற வாசிம் அக்ரம்மின் சாதனையை (146) முந்தி முதலிடத்துகு சென்றுள்ளார். பும்ரா மொத்தம் 150 விக்கெட்களை இந்த நாடுகளில் வீழ்த்தியுள்ளார்.