திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 5 டிசம்பர் 2020 (15:52 IST)

நடராஜனை ’’யாக்கர் கிங்’’ எனப் புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் !…

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்  முதல் ஒருநாள் போடியிலேயே இரண்டு விக்கெட்டுகல் வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே ஆச்சர்யப்படுத்தினார் சேலத்திலிருந்து கிளம்பிய இளம்வீர்ர நடராஜன்.

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவுன் தொடர்ச்சியான இரண்டாவது வெற்றிக்கு காரணமாகி கேப்டன் கோலியின் பாராட்டையும் , ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் தங்களின் தங்கமகன் நடராஜனை நினைத்துப் பெருமை கொள்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர் நடராஜனை யுடியூப் தளத்தில்  யாக்கர் கிங் எனப் புகழாரம் சூட்டி, அவரது வீடியோக்களையும் பதிவிட்டுள்ளது.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர் மெக்ராத்திடம் நடராஜன் பரிசு பெருவது போன்ற புகைப்படம்  தற்போது வைராலி வருகிறது.