1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (08:37 IST)

அடுத்த 2 டி20 போட்டிகளில் இருந்து ஜடேஜா அவுட்!!

காயத்தின் காரணமாக அடுத்த இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி நேற்று கான்பெராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணியைச் சேர்ந்த கே எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர்.
 
இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில் நேற்று பேட்டிங் செய்யும் போது இந்திய அணியின் ஜடேஜா காயம் அடைந்தார். இதனால் அடுத்த இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.