வணக்கம்டி மாப்ள… ஆஸ்திரேலியாவுல இருந்து வார்னர் – புதிய கெட் அப்பில் வைரலான புகைப்படம்!

Last Updated: சனி, 5 டிசம்பர் 2020 (15:36 IST)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை டிவிட்டர் பிரபலத்தின் புகைப்படத்தை போல வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கொரோனா விடுமுறை காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பக்கத்தில் அடிக்கடி தமிழ் பாடல்களுக்கு ஆட்டம் போடும் வீடியோக்களை வெளியிட்டு தமிழக மக்களிடம் பிரபலமானார். தேவர் மகன் படத்தின் பாடலான ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற ’ஒட்டகத்த கட்டிக்கோ’ பாடல் ஆகியவற்றுக்கு அவர் தனது மனைவி மகளுடன் நடனம் ஆடினார்.

இந்நிலையில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக நெட்டிசன் ஒருவர் அவரை வணக்கம்டி மாப்ள் என பேசும் டிக்டாக் பிரபலத்தை போல சித்தருத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அந்த புகைப்படத்தை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வார்னர்.இதில் மேலும் படிக்கவும் :