தொடர்புடைய செய்திகள்
- எதுவும் திருடு போகல.. ஏதோ கோவத்துல பேசிட்டேன்! - கஞ்சா கருப்பு வழக்கில் திடீர் திருப்பம்!
- ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!
- பிசிசிஐ-யின் புதிய விதி கோலிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.. பிராட் ஹாக் கருத்து!
- ரஞ்சிக் கோப்பையின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கலக்கிய ஜடேஜா!
- யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! வேங்கைவயல் வழக்கு குறித்து பா ரஞ்சித்..!
பேட்டிங் சொதப்பல்… ரஞ்சிப் போட்டிக்கு முன்னதாக பழைய கோச்சிடம் ஆலோசனை பெறும் கோலி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 190 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் ஓய்வு கிடைக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தப்பட்டனர். இதையேற்று ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் மாநில அணிகளுக்காக விளையாடிய நிலையில் வரும் 30 ஆம் தேதி டெல்லி அணிக்காக பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிப் போட்டியில் விளையாடவுள்ளார் கோலி.
அதற்கு முன்பாக இப்போது மும்பையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் கோலியுடன் இருந்து அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.