வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (16:15 IST)

மும்பை அணியில் இருந்து விலகும் அர்ஜுன் டெண்டுல்கர்?... கோவா அணிக்கு விளையாட ஆசை!

இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டில் ஆர்வமாக விளையாடி வருகிறார்.

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் இதுவரை நடந்த எந்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுபோல ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளிலும் அவர் மும்பை அணிக்காக விளையாடினாலும், இதுவரை அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில் அவர் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்கு விளையாட உள்ளார். இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்றிதழை அவர் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கோவா அணிக்காக விளையாடினால் அவருக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கும். அதனால் அவரின் ஆட்டத்திறன் மேம்படும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.