1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:22 IST)

பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த நடிகை டாப்ஸி

மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை டாப்ஸிக்கும் ஒரு பத்திரிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

தற்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகும் டோபாரோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகிறது. இது சம்மந்தமான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை டாப்ஸி கலந்துகொண்டார். அப்போது அவரை புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க சொன்ன பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

அப்போது டாப்ஸி “நான் என் வேலையை ஒழுங்காக செய்கிறேன். கேமரா என்னை நோக்கி இருப்பதால் நான் சொல்வது மட்டும் தெரியும். கேமரா உங்கள் பக்கம் திரும்பினால் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதும் தெரியும். நீங்கள் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்” என கோபத்தை வெளிப்படுத்தி பேசினார். இந்த சம்பவமானது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.