புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (19:30 IST)

பரிசுத்தொகையை இலங்கைக்கு நன்கொடையாக கொடுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள்!

australia
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சென்று கிரிக்கெட் விளையாடி நிலையில் தங்களுக்கு கிடைத்த பரிசுத் தொகையை இலங்கை அரசுக்கு அளித்துள்ளனர் 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது 
 
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதன்பின் இலங்கை அணி ஒருநாள் தொடரை வெல்ல டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்தது 
 
இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கிடைத்த பரிசு தொகையை இலங்கை மக்களுக்கு நன்கொடையாக அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இந்த உதவியை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது