திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (21:29 IST)

சொந்த அணியிலேயே நிறவெறி கொடுமை - பிரபல வீரர் வேதனை

ராஸ் டெய்லெர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தனக்கு நிறவெறி கொடுமை நடந்துள்ளதாக பிரபல முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராஸ் டைலர். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான அணியின் இடம்பிடித்து ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமை நிரூபித்தார்.

அதிக சதியம் மற்றும் அதிக ரன்கள் அடித்த  நியூசிலாந்து வீரராக சாதனை படைத்துள்ளார் ராஸ் டைலர்.

இவர் கடந்த பிப்ரவரி மாதத்தின் வங்க தேசத்திற்கு எதிரான  டெஸ்ட் தொடரின் போது ஓய்வு பெற்றார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த  நிலையில் ராஸ் டெய்லர் தன் வாழ்க்கை அனுபவத்தை சுயசரிதையாக  பிளாக் அன்ட்வைட் தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார். அதில், தன் சொந்த அணியில் தான் மா நிறமாக இருந்ததற்காக மற்ற வெள்ளை நிறவீரர்களால் கேலிக்கு உள்ளானதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.