துறைமுகத்தில் தனியார் பங்களிப்பு; ‘அதானி.. அதானி’ என கத்திய எதிர்க்கட்சிகள்!
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நடந்து வரும் நிலையில் துறைமுகத்தில் தனியார் பங்களிப்பு குறித்த அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் அமளி செய்துள்ளன.
மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சுகாதாரம், ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியான நிலையில் இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. அதில்,
தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகின. அதை தொடர்ந்து துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு குறித்த அறிவிப்பும் வெளியானது.
இதனால் அமளி ஏற்படுத்திய எதிர்க்கட்சிகள் அதானி.. அதானி என கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தமிழகத்தில் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதானி குழுமம் தொடர்பான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பட்ஜெட் அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.