செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:35 IST)

பட்ஜெட்டில் தாக்கம் ஏற்படுத்திய கொரோனா! – சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு!

மத்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடந்து வரும் நிலையில் சுகாதாரத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும் முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் வரலாற்றில் இந்த முறை டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கொரோனா நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் பட்ஜெட் தாக்கலில் சுகாதாரத்திற்கு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசிகளுக்காக 35,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.64,180 கோடி நிதியில் சுயசார்பு சுகாதார திட்டம் (ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத்) உருவாக்கப்படும்

நகர்புற தூய்மை பணிகள் மற்றும் சுகாதாரத்திற்காக 1.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதாரத்துறை இணையத்தளம் உருவாக்கப்படும்.

நடப்பு நிதியாண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்

காற்று மாசை கட்டுப்படுத்த ரூ.2,217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

இவ்வாறு பட்ஜெட் தாக்கலில் கூறப்பட்டுள்ளது.