செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:54 IST)

சென்னை மெட்ரோ, தமிழக சாலைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சென்னை மெட்ரோ, தமிழக சாலைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் தமிழக நெடுஞ்சாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது
 
பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் என்றும், கூறிய மத்திய நிதியமைச்சர் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு என அறிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும் என்றும், ஏற்கனவே 41,000 கி.மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படும் என அறிவித்த நிர்மலா சீதாராமன், மதுரை - கொல்லம் இடையே பொருளாதார சாலை திட்டம் தொடங்கப்படும் எனவும் இதன் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு செய்துள்ளார்.
 
தமிழகம் உள்பட தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.