புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2021 - 2022
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:50 IST)

மின்சாரத்துறையில் தனியார் நிறுவனங்கள்? பட்ஜெட் அறிவிப்பால் பரபரப்பு!

மத்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடந்து வரும் நிலையில் மின்சார துறை குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும் முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் வரலாற்றில் இந்த முறை டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன்படி மின்சாரத்துறை குறித்த அறிவிப்பில், நாட்டில் மாநில அளவிலான மின்சார வசதிகளை மேம்படுத்த ரூ.3.95 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் நுகர்வோர் இனி தாங்கள் விரும்பும் மின் விநியோக நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை பெற வசதி செய்யப்படும் என்றும், மின்சார துறையில் போட்டிகளை ஏற்படுத்துதல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மாநில மின்சார வாரியங்கள் எதிர்காலத்தில் தனியார்மயமாக்க படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.