கருப்பு உடையில் வந்த எம்.பிக்கள்; பட்ஜெட் வாசிக்கும்போது அமளி!

Prasanth Karthick| Last Modified திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:14 IST)
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நடந்துவரும் நிலையில் கருப்பு உடை அணிந்து வந்த எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும் முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் வரலாற்றில் இந்த முறை டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வந்த பஞ்சாப் எம்.பிக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடையணிந்து வந்துள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கியதும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரைய வாசித்து வரும் நிலையில் அவர்கள் சிறிது நேரத்தில் அமைதி ஆயினர்.இதில் மேலும் படிக்கவும் :