ஜீ5 தளத்தில் வெளியானது 'சிகை': பேட்ட, விஸ்வாசத்தின் போட்டியை எதிர்கொள்ளுமா?

Last Updated: புதன், 9 ஜனவரி 2019 (16:23 IST)
அடுத்த வாரம் வரவுள்ள பொங்கல் பண்டிகை சிறப்புத் திரைப்படமாக தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகவுள்ள நிலையில், நடிகர் கதிர் பெண் வேடம் ஏற்று நடித்துள்ள 'சிகை' என்னும் திரைப்படம் ஜீ5 தளத்தில் (Online streaming site) வெளியாகியுள்ளது.


 
தமிழ் திரையுலகை பொறுத்தவரை பொங்கல், தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகைகளை ஒட்டி வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு மட்டுமல்லாது, அதிக திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டியும் இருக்கும்.
 
அந்த வகையில், அடுத்த வாரம் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் திரையுலகிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் மட்டும் நாளை (ஜனவரி 10) வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மற்ற திரைப்படங்களை போன்று திரையரங்கில் படத்தை வெளியிடுவதை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட சிகை என்னும் திரைப்படம் இதுவரை தமிழ் திரைத்துறை பார்த்திராத ஜீ5 தளத்தில் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது.
 
'மதயானை கூட்டம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 'விக்ரம் வேதா'. 'பரியேறும் பெருமாள்' ஆகிய திரைப்படங்களின் மூலம் பலரது கவனத்தை பெற்ற நடிகர் கதிர் கதாநாயக நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார்.
 
திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த வாரம் இணையவழி ஒளிபரப்புத் தளமான ஜீ5யில் (ZEE5) நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது பல்வேறு தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இதுவரை தமிழ் திரையுலகில் வெளியாகி சில மாதங்களான திரைப்படங்களே நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற இணையதளங்களில் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜீ5 என்னும் இணையதளத்தில் தற்போது முதல் முறையாக இந்த திரைப்படம் நேரடியாகவே இணையதளத்தில் வெளியானது குறித்தும், அதற்கு மக்களின் வரவேற்பு இருக்குமா? இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற முயற்சிகள் குறித்தும் இந்த கட்டுரை அலசுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :