விஸ்வாசம் படத்தின் முதல் "விமர்சனம்" - படம் பக்கா மாஸ்..!

Last Updated: புதன், 9 ஜனவரி 2019 (18:05 IST)
விஸ்வாசம் : அஜித் ரசிகர்களின் இதயத்தை திருடிட்டார் - பிரபலத்தின் முதல் விமர்சனம்! 


 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலை ஒட்டி நாளை ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ஐக்கிய அரபு சென்சார் போர்டு உறுப்பினர் விஸ்வாசம் திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் என கருத்து தெரிவித்துள்ளார்.
 
 வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். 
 
யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது . 
 
நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் நேரத்தில் படத்தின் முதல்  விமர்சனம் ஐக்கிய அரசு நாட்டின் சென்சார் போர்டில் உறுப்பினர்  உமர் சந்து கருத்து தெரிவித்துள்ளார். 
 
விஸ்வாசம் படத்தை பற்றி ட்விட்டரில் கூறிய அவர்  , 
 
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டேன். என்ன ஒரு மாஸ் பொழுதுபோக்கு படம். அதிலும், முதல் பாதி முழுவதும் சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் இருக்கிறது. தல அஜித் கலக்கியிருக்கிறார். ரசிகர்களின் இதயத்தை திருடுகிறார்” என பதிவிட்டுள்ளார்.


 
படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு உமர் சந்தின் இந்த விமர்சனம் இனிப்பை ஊட்டும் செய்தியாக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :