தமிழகம் வரும் மோடி!.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!..
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.. சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இந்த கூட்டணியில் இணைந்த்து. திமுக வழக்கம் போல் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எனத் தெரிகிறது. அதேபோல் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என தெரிகிறது.
ஒருபக்கம் அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என தெரிகிறது. இந்நிலையில்தான் பிரதமர் மோடி வருகிற 23ம் தேதி தமிழகத்திற்கு வரவிருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டம் வருகிற 23ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடக்கவுள்ளது.
ஒருபக்கம் அதே தேதியில் சென்னையில் பொது கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.. இதையடுத்து மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஆய்வு செய்தார்.. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.