திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (17:43 IST)

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

விமானத்தில் தவறாக ஏறிவிட்டதாக நினைத்து அவசர கால ஜன்னல் வழியாக இளைஞர் ஒருவர் வெளியே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 
அமெரிக்கா நியூயார்க்கில் யுனைட்டட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் ட்ராய் ஃபட்டூன்(25) என்பவர் விமனத்தில் உள்ளே சென்ற பிறகு சந்தேகமடைந்து இது நான் செல்ல வேண்டிய விமானம் இல்லை என்றும் தன்னை இறக்கிவிடும்படியும் கூறியுள்ளார்.
 
ஆனால் விமான அதிகரிகள் அவரது பேச்சை கேட்காத காரணத்தினால், அவசர கால ஜன்னலை திறந்து விமானத்தின் இறக்கை மீது குதித்துள்ளார். இதனால் இறக்கை மீது ஊற்றப்பட்ட சூடு நீரால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவரது விமான பயணிச்சீட்டு படி அவர் சரியான விமானத்தில்தான் ஏறியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுகிழமை நிகழ்ந்துள்ளது.