வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2018 (08:53 IST)

விமானத்திற்கு ரூ.70 லட்சம் வாடகை செலுத்தி இந்தியா கொண்டுவரப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உடல்

நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர துபாய் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சனிக்கிழமை ஸ்ரீதேவியின் மரண செய்தி கேட்ட உடனே ஞாயிறு அன்று தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம், ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மூன்று நாட்கள் அந்த விமான நிலையில் காத்திருந்த அந்த விமானம் இன்று ஸ்ரீதேவியின் பூதவுடலை சுமந்து கொண்டு மும்பை வந்தடைந்தது.
 
நேற்று மாலை வரை 3 நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.