ஸ்ரீதேவிக்காக அம்பானி தனி விமானம் அனுப்பியது ஏன் தெரியுமா?
பிரபல நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத வகையில் அவர் துபாயில் மரணம் அடைந்துவிட்டார். சனிக்கிழமை ஸ்ரீதேவியின் மரண செய்தி கேட்ட உடனே ஞாயிறு அன்று தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம், ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மூன்று நாட்கள் அந்த விமான நிலையில் காத்திருந்த அந்த விமானம் இன்று ஸ்ரீதேவியின் பூதவுடலை சுமந்து கொண்டு மும்பை வந்தடைந்தது.
ஸ்ரீதேவி துபாயில் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியின் மணமகள், அனில் அம்பானியின் மனைவி தினா அம்பானியின் நெருங்கிய உறவினர். அன்ந்த்ரா மோதிவாலா. அம்பானி மனைவியின் நெருங்கிய உறவினரான இவருடைய திருமணத்தில் கலந்து கொள்ள சென்ற இடத்தில்தான் ஸ்ரீதேவியில் உயிர் பிரிந்துள்ளது. இதன் காரணமாகவே அனில் அம்பானி தனி விமானத்தை அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி அனில் அம்பானியின் குடும்பத்தினர் அனைவருமே ஸ்ரீதேவியின் நடிப்பை விரும்பி ரசிப்பவர்கள். இதன் காரணமாகவும் தனி விமானம் அனுப்பப்பட்டிருக்கலாம்