வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (17:02 IST)

ஸ்ரீதேவி மறைவிற்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவி இந்தியாவில் மட்டுமின்றி உலகப்புகழ் பெற்றவர் என்பதால் அவருக்கு உலகின் பல நாடுகளில் உள்ள விஐபிக்களிடம் இருந்து இரங்கல் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன

அந்த வகையில் மறைந்த ஸ்ரீதேவியின், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் உலகம் முழுவதும் உள்ள மக்களை தனது நடிப்பால் ஈர்த்தவர் ஸ்ரீதேவி என்றும் அவருடைய குடும்பத்தினர்களுக்கு அமெரிக்கா தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளது.