1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Yemen army assassinated by a anonymous missile

ஏமன் ராணுவ முகாமில் பாய்ந்த ஏவுகணை: 60 பேர் பலி!

World
ஏமன் ராணுவ முகாம்கள் மீது ஏவுகணைகள் தாக்கியதில் 24 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு ஏமனில் உள்ள மாரீப் மாகாணத்தில் அல்-மிலா பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு பாயும் ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 60 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை ஏமனுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொள்ளவில்லை. இதனால் தாக்குதல் நடத்தியது யார் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்க சவுதி அரேபியா அவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் சவுதியின் ஏவுகணை தவறுதலாக ஏமன் ராணுவ முகாமை தாக்கியிருக்குமோ என பேசிக் கொள்ளப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
குடியுரிமை சட்டம்: உண்மையை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்