இணையத்தில் வைரலாகி வரும் ”ஹல்க்” நாய்க்குட்டி; அமெரிக்காவில் நிகந்த அதிசயம்
அமெரிக்காவில் பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டிக்கு ஹல்க் என்று பெயரிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஹேவுட் கவுண்டி பகுதியில் வசித்து வருபவர் ஷனா ஸ்டேமி. இவர் “வொயிட் ஷெபர்ட்” வகை நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். அந்த நாயின் பெயர் ஜிப்சி.
இந்நிலையில் ஜிப்சி எட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் 4 ஆவதாக பிறந்த குட்டி பச்சை நிறத்தில் இருந்துள்ளது. இதனை கண்ட ஷனா ஸ்டெமி அதிர்ச்சியடைந்தார். எனினும் அந்த பச்சை நிற நாய் குட்டி ஆரோக்கியமாக உள்ளதாக கூறுகிறார்.
இது குறித்து ஜுனாலுஸ்கா கால்நடை மருத்துவனை மேலாளர் சுசான்னே, ஜிப்சியின் வயிற்றுக்குள் இருந்த திரவத்தால் குட்டி நாயின் உடம்பில் கறைப்பட்டிருக்கலாம்” என கூறியுள்ளார். மேலும் ”அந்த நாய்க்குட்டி எந்த கதிர்வீச்சாளும் தாக்கப்படவில்லை” என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டிக்கு காமிக்ஸ் கதாப்பாத்திரங்களில் வரும் பச்சை மனிதனின் பெயரான “ஹல்க்” என்ற பெயரை சூட்டியுள்ளனர். ”ஹல்க்”-ன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.