1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2020 (08:41 IST)

உலக தலைவர்களையும் விட்டுவைக்காத கொரோனா! அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஏழை எளியவர் முதல் பணக்காரர்கள் வரை சாமானியர்கள் முதல் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் வரை பாகுபாடு இன்றி மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் உலக தலைவர்கள் பலரையும் விட்டுவைக்காமல் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் உலகத் தலைவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஒரு செய்தியை தற்போது பார்ப்போம்
 
பிரேசில் அதிபரின் செயலாளர் ஃபபியோ வஜ்கார்டன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது செய்யப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சையில் உள்ளார். அதேபோல் கனடா பிரதமர் ஜஸ்டின் அவர்களின் மனைவி சோபி கிரிகோய்ரே என்பவருக்குக் கொரோனா சமீபத்தில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
 
பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் பிராங்க் ரெய்ஸ்டெர் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் பிரான்ஸ் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரான் நாட்டின் துணை அதிபர் உள்பட அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் ஸ்பெயின் நாட்டின் பிரதமரின் மனைவி பெகோன கோமெஸ் என்பவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உலகத் தலைவர்கள் யாரையும் விட்டுவைக்காமல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது