1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2020 (07:27 IST)

கிராமங்களில் மரக்கிளை தான் தனிமைப்படுத்துதல்: வைரலாகும் புகைப்படம்

கிராமங்களில் மரக்கிளை தான் தனிமைப்படுத்துதல்
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கடைபிடிக்க வேண்டும் என மத்திய மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இந்த தனிமைப்படுத்துதல் பணக்காரர்களுக்கு பிரச்சனை இல்லை. ஏனெனில் அவர்களுடைய வீட்டில் பல அறைகள் இருக்கும் ஆனால் ஏழை எளிய மக்கள் ஒரே அறையில் பலர் வாழ்ந்து வரும்போது தனிமைப் படுத்துதல் என்பது சாத்தியம் இல்லாத வகையில் உள்ளது
 
இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அந்த வாலிபர் மரக்கிளைகளில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்
 
அவருக்கு சாப்பாடு அவரது குடும்பத்தினர் மரத்தின் கீழ் வைப்பார்கள். சாப்பிடும் நேரம் மட்டும் அவர் மரத்தின் கீழே இறங்கி சாப்பிட்டுவிட்டு அதன் பின் மீண்டும் மரத்தில் ஏறிக் கொள்வார். இவ்வாறு அவர் மரக்கிளையிலேயே கடந்த சில நாட்களாக தன்னை தனிமைப்படுத்தி வாழ்ந்து வருகிறார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது