வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Updated : சனி, 28 மார்ச் 2020 (22:29 IST)

கொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு

தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு ? பதற்றத்தை ஏற்படுத்திய ஆனந்த் விகார் நிலையம் ?

இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்தத எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையயில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த 61 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு ஸ்ரீபெட்டாலிங் என்ற பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்று முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்நிகழ்வில் பங்கேற்ற 16,500 பேரில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு விட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. மீதமுள்ளவர்களும் தாமே முன்வந்து பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் குறைந்தபட்சம் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருவர்கள் மூலம் நாட்டில் கணிசமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறளது என்பதால் இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

கிருமித் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மலேசிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் பிடி மேலும் இறுகும்:

இதற்கிடையே மலேசியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுநடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை சிலர் தொடர்ந்து மீறி வருவதை ஏற்க இயலாது என அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் அரசு ஆணையை மீறியதாக 400க்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் பிடி மேலும் இறுகும் என தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட தொழில் மற்றும் சேவைகள் இயங்கக்கூடிய கால அவகாசம் குறைக்கப்படலாம் அல்லது அவற்றின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி ஏராளமான பகுதிகளில் வணிகம், பொதுச்சேவை, தொழில்கள் தொடர்பான இடங்களை மூடுமாறு தேசிய பாதுகாப்பு மன்றம் பரிந்துரைத்துள்ளது என்றார்.