செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 29 மார்ச் 2020 (07:39 IST)

அவசர பயணம் செல்ல அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

அவசர பயணம் செல்ல அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே செல்பவர்களுக்கு காவலர்கல் நூதனமான தண்டனையையும் லத்தியடியும் கொடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவின்போது அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு செல்ல விரும்புபவர்கள் 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணம் செய்ய இருப்பவர்கள் தங்களுடைய பயணத்துக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது