செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 28 மார்ச் 2020 (22:31 IST)

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை !

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை !

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் வரை தமிழகத்தில் மொத்தம் 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே
 

இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது

சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் அடுத்து செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து  ஆலோசிக்கபட்டதாக தெரிகிறது.