1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. White houst gun shot make shocks in US

வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு; பேட்டியிலிருந்து வெளியேறிய ட்ரம்ப்!

World
அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்த போது திடீர் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கியுடன் மர்ம நபர் சுற்றி திரிவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர் தப்பிக்க முயன்றபோது பாதுகாப்பு படையினர் சுட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்து அதிபர் ட்ரம்ப் வெளியேற்றப்பட்டார். பிறகு பதற்றம் தணிந்ததும் பத்திரிக்கையாளர்களுக்கு பேசிய அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்