ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:34 IST)

ராமர்தான் கிடைக்கல; புத்தரை முயற்சி பண்ணுவோம்! – நேபாளத்தின் அடுத்த சர்ச்சை!

ராமர் நேபாளத்தில் பிறந்தார் என நேபாள பிரதமர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது புத்தரின் பூமி நேபாளம் என அந்நாட்டு வெளியுறவு துறை கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள பிரதமரின் பேச்சுக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனங்கல் எழுந்ததால் தனது பேச்சை திரும்ப பெற்றார் பிரதமர் ஷர்மா ஒலி.

இந்நிலையில் சீனா, தாய்லாந்து ஜப்பான் என பாதி ஆசிய கண்டம் முழுவதும் பரவியிருக்கும் புத்த மதத்தின் மூலவரான கௌதம புத்தர் பிறந்த பகுதி இந்தியா என்ற பெருமை இந்தியாவிற்கு உண்டு. இந்நிலையில் தற்போது புத்தரின் புனித பூமி நேபாளம்தான் என அந்நாட்டு அரசு பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து நேபாள வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கௌதம புத்தர் லும்பினியில் பிறந்ததற்கான தொல்லியல் ஆய்வுகள் உள்ளது. எனவே புத்த மதத்தின் பிறப்பிடமான லும்பினியை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளது.