1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (13:44 IST)

வாரத்தில் 4 நாள்களே வேலை! பிரிட்டனில் சோதனை முயற்சி வெற்றி!

work
வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யும் சோதனை திட்டம் பிரிட்டனியில் தொடங்கப்பட்டது. சுமார் 61 நிறுவனங்கள் இந்த சோதனை திட்டத்தை தொடங்கிய நிலையில் சோதனை முடிவில் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையை தொடர போவதாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 91 சதவீத நிறுவனங்கள் இந்த சோதனை திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து நிரந்தரமாக நான்கு நாள் வேலை திட்டத்தை தொடர போவதாக அறிவித்துள்ளன. நான்கு சதவீத நிறுவனங்கள் மட்டும் இந்த திட்டத்தை தொடர போவதில்லை என அறிவித்துள்ளன. 
 
இந்த சோதனை திட்டத்திற்கு சராசரியாக 10க்கு 8.50 மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் இந்த சோதனை திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran