1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:15 IST)

சைலண்ட் ஆக நடந்து முடிந்த அஜித் 62 பட வேலை… அப்டேட் எப்போது?

அஜித் 62 படத்தை இயக்க மகிழ் திருமேனி ஒப்பந்தம் ஆகியுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முன் தயாரிப்பு வேலைகளை இப்போது மகிழ் திருமேனி விறுவிறுப்பாக செய்துவரும் நிலையில் மார்ச் இரண்டாம் வாரத்தில் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் நேற்று அஜித் 62 படத்துக்கான அலுவலக பூஜை எளிமையாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.