1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:59 IST)

வேலையில்லாத நபருக்கு 3 மனைவிகள்.. மூவருமே கை நிறைய சம்பாதிக்கும் ஆச்சரியம்..!

nick
வேலையில்லாத நபருக்கு 3 மனைவிகள்.. மூவருமே கை நிறைய சம்பாதிக்கும் ஆச்சரியம்..!
அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர் என்றும் மூவருமே கை நிறைய சம்பாதித்து வந்தாலும் அந்த நபருக்கு வேலை இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த நிக் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு 9 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெனிஃபர் என்பவரையும் மூன்றாவது ஆக டேனியல் என்பவரையும் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டார்
 
மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிக் எந்தவிதமான வேலையும் செய்யவில்லை என்பதும் வேலை இல்லாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது மூன்று மனைவிகளும் வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கின்றனர். 
 
நான் என்னுடைய பொறுப்பு அனைத்தையும் ராணிகளிடம் கொடுத்து விட்டேன் என்றும் அதனால் தான் நான் வேலையில்லாமல் ஜாலியாக இருக்கிறேன் என்றும் நீக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran