1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (12:05 IST)

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் வருமானவரி சோதனை.. பன்னாட்டு நிறுவனத்தில் சோதனையா?

income tax raid
ஒரு பக்கம் குஜராத் உள்பட 8 மாநிலங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் வருமானவரித்துறையினர் இன்னொரு பக்கம் சோதனை நடத்தி வருகின்றனர். 
 
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேச ஆகிய 11 மாநிலங்களில் 64 அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
நூற்றுக்கணக்கான வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran