ஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’

imran khan
Last Modified ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (12:18 IST)
பாகிஸ்தானில்  வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானது ஹேக்கர்களால் முடக்கபட்டு அந்நாட்டு பிரதரமர் இமரான் கானின் முக்கியமான விவரங்கள் யாவும் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
ஹேக்கர்ஸின் வேலையே எதாவது முக்கியமான இணையதளத்தை  முடக்குவதும் அதற்காகப் பணம் கேட்பதும். அதிலுள்ள விவரங்களை லீக் ஆக்குவதுமாக இருந்து வருகிறது. இதேபோல் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளதால்  அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தை இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இணையதள பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்பொழுது இதைச் சரிசெய்ய தகவல் தொழில்நுட்பக் குழு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் தங்கள் நாட்டு இணையதளத்தை முடக்கியது இந்தியா தான் என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் முகமது பைசல் குற்றம் சாட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :