1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (16:44 IST)

பட்டு சட்ட, கூலிங் கிளாஸு... ஜமாய்க்கும் கேப்டன் விஜயகாந்த்!

நடிகர் விஜய்காந்த் அரசியலில் களமிரங்கிய பிறகு நடிப்பதற்கு முழுக்குபோட்டார். திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுக்கு முன்னர் அதிரடி வளர்ச்சியுடன் முன்னுக்கு வந்தது விஜயகாந்தின் தேமுதிக கட்சி. 
 
ஆனால், சோகம் என்னவெனில் அதே வேகத்தில் சரியவும் செய்தது. சமீபகாலமாக கட்சியை மீண்டும் மீட்டெடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக பிரேமலதா பொருளாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். விஜய்காந்த் மகன் விஜயபிரபாகரன் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார். 
 
இந்நிலையில், இன்று தேமுதிகவுக்கென ஒரு தனி வெப்சைட்டை துவங்கி வைத்தார் விஜயகாந்த். இந்த நிகழ்வு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 
இதுசம்பந்தமான போட்டோக்கள் தற்போது இணையத்தில் வலம் வருகின்றன. இந்த புகைப்படத்தில் விஜய்காந்த் பட்டு சட்டை, விபூதி, கூலிங் கிளாசஸ் என கெத்தாக உள்ளார். இது அவரது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று பிரேமலதா குறிப்பிட்டிருந்த நிலையில் தேர்தலுக்காகத்தான் இந்த நடவடிக்கைகள் என தகவல் தெரிவிக்கின்றன.