நாடாளுமன்ற தேர்தல் தேதியை பொய்யாக இணையதளத்தில் வெளியிட்டவர் கைது...
நாடளுமன்ற தேர்த்ல இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் எல்லா கட்சிகளும் சிறப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகி உள்ளதை பார்த்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போலியான தேர்தல் தேதியை வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கோமாந்த் குமார் என்பவரை (21) கைது செய்துள்ளனர். இவர் இணையத்தில் பொய்யான தேர்தல் தேதியை உருவாக்கி வெளியிட்டுள்ளார். மேலும் இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகின்றன.