திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (20:13 IST)

சினிமா பாணியில் உதவி செய்து, வலைதளங்களில் மாஸ் காட்டும் இளம் ஹீரோ ...

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தன் உயிரை துச்சமாகக் கருதி பல உயிர்களைக் காப்பாற்றினார். ஆனால் அவ்ர் கடுமையாக காயமடைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது சேவையை பாராட்டினார். அதேபோல சில மாதங்களுக்கு முன்பு தன் பிளாட்டில் தீ பரவுவது தெரிந்து பலரைக் காப்பாற்றிய பெண் தீயில் கருகி பலியானார்.அதை தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தற்போது  மும்பையில்  அதே மாதிரி சம்பவம் நடந்துள்ளது.ஆம்!  அந்தேரி மரோல் பகுதியிலுள்ள காம்கார் என்ற தொழிலாளர் நல மருத்துவனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து நேர்ந்தது.
 
5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் உயிரிழப்பை பெருமளவு குறைத்தவர்  சித்து ஹூமானபாத். அவர் ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்பவராக வேலை செய்து வருகிறார்.
 
தீ விபத்து நேர்ந்த போது மருத்துவமனை ஓரத்தில் நின்றிருந்தவர் திடீரென்று அங்கு தீ பரவுவதை பார்த்ததும் தானாகவே மருத்துவமனைக்குள் ஓடியுள்ளார்.
 
அப்போது அங்கு வந்திருந்த  தீயணைப்பு துணையினரோடு சேர்ந்து கொண்டு 10 பேரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது :
 
’தீயணைப்பு வீரர்கள் என்னை ஏணியில் ஏறி மீட்பு பணி செய்ய அவர்கள் அனுமதி அளித்ததால் நானும் என்னால் முடிந்தளவு மக்களுக்கு உதவி செய்ய முடிந்தது. உடனடியாக ஒரு சிறு கோடாறியால் கண்ணாடியை உடைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டேன்.’இவ்வாறு கூறினார்.
 
மருத்துவமனைகளில் எடுக்கப்பட புகைப்படத்தை மருத்துவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அது இப்போது வைரலாகி வருகிறது.
 
இதனையடுத்து மஹாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்துவை நேரில் சந்தித்து பாராட்டினார்.பலரும் இவரது புகைப்படத்தைப் பதிவிட்டு இந்தியாவின் இளம் ஹீரோவாக கருதி வருகின்றனர்.
 
தன் உயிரை துச்சமென கருதி இந்த துணிச்சலான காரியத்தைச் செய்த சித்துவுக்கு எத்தனை  கோடி பாராட்டுக்களும் தகும்.