ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (20:46 IST)

மெக்சிகோவில் வன்முறை- 11 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ   நாட்டு எல்லையில் நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டு எல்லைப் பகுதியில்  உள்ள சியூத்த் ஜூவாரஸ் என்ற  நகரில் ஒரு சிறைச்சாலை உள்ளது. இங்கு  நேற்று முன் தினம் இரு பிரிவினருக்கு இடையே திடீரென்று மோதல் நடந்தது.

இந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளதனர்.
இந்த மோதல் பற்றிய தகவல் வெளியில் பரவியதால் அங்குள்ள நகரத்திலும் இரு குழுக்கள் மோதிக் கொண்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் 4 வனொலி ஊழியர்கள்  உள்ளிட்ட 9 பேர் பலியாகினர்.

போதைக் குழினரின் அராஜகத்தால் தான் இந்தப் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்துப் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடலாம் எனத் தகவல் வெளியாகிறது.