கனடாவில் வேகமாக பரவும் குரங்கு அம்மை: 1059 பேருக்கு பாதிப்பு என தகவல்!
இந்தியா உள்பட உலகம் முழுவதும் குரங்கு அம்மை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கனடா நாட்டில் அதிகமாக பரவி வருவதாகவும் இதுவரை 1059 பேருக்கு குரங்கு அம்மை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
அமெரிக்கா இங்கிலாந்து ஸ்பெயின் பிரான்ஸ் உள்பட 50க்கும் மேலான நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி இருப்பதாகவும் அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கனடாவில் 1,059 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தேசிய அளவிலான குரங்கு அம்மை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருவதாகவும் நோய்க்கு தடுப்பு ஊசிகளை செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது