திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (15:06 IST)

ஐசியு வார்டில் தீ விபத்து: 11 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து. 
 
மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தீயில் குறுகியும், மூச்சு திணறியும் 11 பேர் இறந்துள்ளனர்.
 
இந்த வார்டில் மொத்தம் 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை 11 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும், மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.