நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...
இமயமலையின் கீழ் பகுதியில் திபெத், நேபாளம், உத்தரகண்ட் போன்ற நாடுகள் உள்ளன. இந்நிலையில்தான், சமீபத்தில் இமயமலையில் இருந்து பனிப்பாறைகள் உருகி ஒரு செயற்கை ஏரி உருவாகி அந்த ஏரி உடைபட்டு ஏராளமான நீர் வெள்ளமாக உருமாறி பள்ளத்திலிருந்து நேபாள நாட்டின் மீது பாய்ந்தது.
இதை தொடர்ந்து வட நேபாளத்தில் உள்ள பல ஊர்களும் வெள்ளத்தில் சிக்கியது. அதில், வீடுகளும், கட்டிடங்களும், வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. 500க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது.
அவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 400க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெளியிடும் கரியமில வாயு காரணமாக வெப்பம் ஏற்பட்டு இமயமலையில் பனிப்பாறைகள் வெப்பமாகி பணிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது..
இந்நிலையில்தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாளம் மற்றும் சீன எல்லைகள் உள்ள இமயமலை பகுதிகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், பனிப்பாறை ஏரிகளை சுற்றி சென்சார்கள், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை நிறுவ அதிகாரிகளுக்கு உத்தரகன்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டிருக்கிறார்..