1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. US Pressures G7 to Impose Additional Tariffs on India

இந்தியா, சீனா மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா அழுத்தம்.. ஜி7 நாடுகள் ஏற்குமா?

இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா மீது கூடுதல் வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. 
 
ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கி கொண்டிருக்கும் இந்தியா மற்றும் சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா வரி விதித்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி7 குழுவும் இந்த இரு நாடுகள் மீதும் 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 
 
இந்தியா மற்றும் சீனா மீது கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா முனைப்பு காட்டி வருவது சர்வதேச அரங்கில் ஒரு முக்கியப் பொருளாதார மற்றும் அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
திருச்சியில் விஜய் நடத்தும் முதல் கூட்டம்.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்தம்பிப்பு..!