திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (12:50 IST)

என்ன அந்த வார்த்தைய சொல்ல வெச்சிடாத! 25 பைசா கேட்டு வங்கியில் வாக்குவாதம்! கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்!

arrest

அமெரிக்காவில் வங்கி ஒன்றில் தனது கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வங்கிகளில் பல வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் பல்வேறு விதமான கோரிக்கைகளுடன் தினம்தோறும் வங்கிகளை அணுகுவது உண்டு. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கெல் பிளெம்மிங் என்ற 41 வயது நபர். இவர் சம்டர் கவுண்டி என்ற பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தனது வங்கி கணக்கை வைத்துள்ளார்.

சமீபத்தில் அந்த வங்கிக்கு என்ற மைக்கெல் பிளெம்மிங், தனது அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என சொல்லி பணம் எடுக்கும் படிவத்தை வாங்கி நிரப்பியுள்ளார். அதை வாங்கி பார்த்த வங்கி ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் 1 சென்ட் (இந்திய மதிப்பில் 25 பைசா) பணம் வேண்டும் என அவர் நிரப்பியுள்ளார்.
 

அதற்கு அந்த வங்கி ஊழியர் இவ்வளவு குறைந்த தொகையை எல்லாம் படிவம் நிரப்பு பெற முடியாது என கூறியுள்ளார். அதற்கு மைக்கெல், என் காசை நீங்க எப்படி தர மாட்டேன்னு சொல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் என்னை வேறு மாதிரியான வார்த்தைகளில் பேச வைத்து விடாதீர்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். 

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மைக்கெலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 25 பைசா கேட்டு வாடிக்கையாளர் செய்த தகராறு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K